சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 ஐ பறிமுதல் செய்தனர். இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலன், தேனி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சோதனையை துவக்கினர். கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600

சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 ஐ பறிமுதல் செய்தனர்.

இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலன், தேனி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சோதனையை துவக்கினர். கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் பாலமுருகன் மற்றும் மூன்று பணியாளர்களிடம் நள்ளிரவு 12:00 மணி வரை விசாரணை நடந்தது.

போலீசார் கூறுகையில், 'முறைகேடு புகாரில் சோதனை நடத்தப்பட்டது. நவ.19ல் 34 பத்திரங்கள் பதியப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பதிவாளர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X