பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்; துணைமுதல்வர் பங்கேற்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும்2021 சட்டசபை தேர்தல் பணி குறித்து அ.தி.மு.க., தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை வகித்தார். ரவீந்திரநாத் எம்.பி., முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,''வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சிறப்பு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும்2021 சட்டசபை தேர்தல் பணி குறித்து அ.தி.மு.க., தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை வகித்தார். ரவீந்திரநாத் எம்.பி., முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,''வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு விடுபட்ட கட்சியினரை இணைக்க வேண்டும்,''என்றார்.

கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன், முன்னாள் எம்.பி., பார்த்திபன்,மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடைராமர், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட சிறுபான்மை செயலாளர் அபுதாஹிர், ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், செல்லமுத்து,நகர செயலாளர் ராதா, வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, கட்சி நிர்வாகிகள் முருகானந்தம், சுந்தரபாண்டியன், மணிமாறன், ராஜகுரு, சவுந்திரம், சிவக்குமார், அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X