சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வாகனங்கள் மேகமலைக்கு செல்ல தடை

Added : நவ 21, 2020
Share
Advertisement
சின்னமனுார்:மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அபாயத்தால் தேனி மாவட்டம் மேகமலை பகுதிக்கு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் சின்னமனுாரிலிருந்து ஹைவேவிஸ் செல்லும் மலைரோட்டில் 18வது கொண்டை ஊசி

சின்னமனுார்:மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அபாயத்தால் தேனி மாவட்டம் மேகமலை பகுதிக்கு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் சின்னமனுாரிலிருந்து ஹைவேவிஸ் செல்லும் மலைரோட்டில் 18வது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. போலீஸ், நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைத்தனர்.

எனினும் அதன் பக்கவாட்டில் உள்ள மரங்கள் விழும் அபாயமும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் பல இடங்களில் இருப்பதாக வனத்துறை எச்சரித்துள்ளது. இதனால் மேகமலைக்கு சுற்றுலா வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அரசு பஸ்களை கவனமாக இயக்க டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X