சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் '‛போக்சோ'வில் சிறை

Added : நவ 21, 2020
Share
Advertisement
சிவகங்கை:மானாமதுரையில் 17 வயது கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ரயில்வே ஊழியர் விபின்குமாருக்கு 32, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தர பிரதேச மாநிலம் சாத்பூரை சேர்ந்தவர் விபின்குமார். இவர் மானாமதுரை ரயில்வே கேட் கீப்பராக இருந்தார். ரயில்வே காலனியில் தங்கியிருந்தவர் திருமணம் செய்வதாக கூறி அருகே வசிக்கும் 17 வயது கல்லுாரி

சிவகங்கை:மானாமதுரையில் 17 வயது கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ரயில்வே ஊழியர் விபின்குமாருக்கு 32, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தர பிரதேச மாநிலம் சாத்பூரை சேர்ந்தவர் விபின்குமார். இவர் மானாமதுரை ரயில்வே கேட் கீப்பராக இருந்தார். ரயில்வே காலனியில் தங்கியிருந்தவர் திருமணம் செய்வதாக கூறி அருகே வசிக்கும் 17 வயது கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்தார்.2016 நவ.,ல் மானாமதுரை மகளிர் போலீசார் விபின்குமாரை 'போக்சோ'வில் கைது செய்தனர். சிவகங்கை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால், விபின்குமாருக்கு 10 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X