சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லி தனி கிளை சிறையில் மொபைல், சிம் கார்டு பறிமுதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லி, தனி கிளை சிறையில், கைதிகள் தங்கியுள்ள அறையில் இருந்து, மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில், தனி கிளை சிறை உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள், அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறை காண்காணிப்பாளர் முத்துராமன் தலைமையிலான போலீசார்,

பூந்தமல்லி : பூந்தமல்லி, தனி கிளை சிறையில், கைதிகள் தங்கியுள்ள அறையில் இருந்து, மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில், தனி கிளை சிறை உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள், அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறை காண்காணிப்பாளர் முத்துராமன் தலைமையிலான போலீசார், நேற்று காலை, கைதிகளிடம் சோதனை நடத்தினர்.அப்போது, முருகன் என்கிற லோடு முருகன், பாசில் ஆகியோர் தங்கியுள்ள அறையிலிருந்து, இரண்டு மொபைல் போன்கள், இரண்டு சிம் கார்டுகள், இரண்டு சார்ஜர், பேட்டரிகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின், அவற்றை, பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்த மொபைல் போனில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும், 'ஆப்' ஒன்று பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக, பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தனி கிளை சிறையில், சமீபகாலமாக, மொபைல் போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்வது, தொடர் கதையாக உள்ளது.சில மாதங்களுக்கு முன், உறவினரை பார்க்க வந்த பெண் ஒருவர், பிஸ்கட்டில் கஞ்சாவை மறைத்து, எடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X