சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6,000 ஊசி மருந்து அதிரடி பறிமுதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:இலங்கைக்கு கடத்த முயன்ற, 6,000 வைட்டமின் ஊசி மருந்தை, இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள், 'ஹோவர்கிராப்ட்' கப்பலில் மன்னார் வளைகுடா கடலில், நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, தங்கச்சிமடம் தென் கடற்கரையில் கிடந்த மர்ம பார்சலை கைப்பற்றினர்.அதனுள், 1,200

ராமேஸ்வரம்:இலங்கைக்கு கடத்த முயன்ற, 6,000 வைட்டமின் ஊசி மருந்தை, இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள், 'ஹோவர்கிராப்ட்' கப்பலில் மன்னார் வளைகுடா கடலில், நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, தங்கச்சிமடம் தென் கடற்கரையில் கிடந்த மர்ம பார்சலை கைப்பற்றினர்.அதனுள், 1,200 அட்டைகளில், 'வைட்டமின் பி12' ஊசி மருந்து, 6,000 எண்ணிக்கையில் இருந்தன.

மத்திய, மாநில உளவு போலீசார் விசாரணையில், தங்கச்சிமடம் தென் கடற்கரையில் இருந்து, கள்ளப்படகில் இலங்கைக்கு ஊசி மருந்தை கடத்தி சென்றபோது, பாதுகாப்பு படையினரை கண்டதும், கடத்தல்காரர்கள் கீழே போட்டு தப்பியது தெரிந்தது.ஊரடங்கால், இலங்கையில் இறக்குமதிக்கு தடை விதித்ததால், மளிகை, மருந்து பொருட் களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது.

இதனால், தமிழகத்தில் இருந்து, கடத்தல்காரர்கள் சமையல் மஞ்சளை டன் கணக்கில் கடத்திய நிலையில், தற்போது, மருந்துகளை கடத்தி செல்கின்றனர். இந்த ஊசி மருந்தின் இலங்கை மதிப்பு, 6 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X