சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி பெண் அதிகாரியிடம் செயின் பறித்தவர் கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
கம்பம் : கம்பத்தில் வங்கி பெண் அதிகாரியிடம் 12 பவுன் செயின் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தமபாளையம் சோலைமுருகன் மனைவி அனிதா,35. இவர் முத்துலாபுரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் உதவி மேலாளராக உள்ளார். நேற்று காலை 11:00 மணியளவில் கம்பம் - காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற பின் நடந்துவந்தபோது பின்புறமாக வந்த மர்ம நபர் இவர்

கம்பம் : கம்பத்தில் வங்கி பெண் அதிகாரியிடம் 12 பவுன் செயின் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம் சோலைமுருகன் மனைவி அனிதா,35. இவர் முத்துலாபுரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் உதவி மேலாளராக உள்ளார். நேற்று காலை 11:00 மணியளவில் கம்பம் - காமயகவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற பின் நடந்துவந்தபோது பின்புறமாக வந்த மர்ம நபர் இவர் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்து தப்பினார்.

உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன், கம்பத்திற்கும் புதுப்பட்டிக்கும் இடையில் வாழைத்தோப்பில் பதுங்கியிருந்த விவேக் 30, என்பவரை 30 நிமிடத்தில் பிடித்து அனிதாவிடம் பறித்த செயினை பறிமுதல் செய்தார். வருஷநாட்டை சேர்ந்தவர் கம்பத்தில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X