பொது செய்தி

தமிழ்நாடு

வரையாடு, காட்டுயானை ரோட்டை கடக்க வசதி ஏற்படுத்த முடிவு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மூணாறு: மூணாறு-- போடிமெட்டு இடையே வனப்பகுதிகளில் வரையாடு, காட்டு யானை ரோட்டைகடக்கவசதி ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் சம்மதித்தனர்.கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- -போடிமெட்டு இடையே 42 கி.மீ., துாரம் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வழித்தடத்தில் 3.200 கி.மீ., துாரம் வனப்பகுதி என்பதால் அத்துறையினரிடம் அதிகாரிகள் அனுமதி கோரினர். மூணாறு அருகே கேப்

மூணாறு: மூணாறு-- போடிமெட்டு இடையே வனப்பகுதிகளில் வரையாடு, காட்டு யானை ரோட்டைகடக்கவசதி ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் சம்மதித்தனர்.

கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- -போடிமெட்டு இடையே 42 கி.மீ., துாரம் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வழித்தடத்தில் 3.200 கி.மீ., துாரம் வனப்பகுதி என்பதால் அத்துறையினரிடம் அதிகாரிகள் அனுமதி கோரினர். மூணாறு அருகே கேப் ரோட்டின் நுழைவு பகுதியில் வரையாடுகளும், தேவிகுளம்--போடிமெட்டு இடையே பத்து இடங்களில் காட்டு யானைகளின் வழித்தடங்களும்உள்ளன.

அதனால் வரையாடுகள் ரோட்டை கடப்பதற்கு பாலங்களும், யானைகள் கடந்து செல்லும் பகுதிகளில் ரோட்டில் இருபுறமும் மண் திட்டுகளும் அமைத்து கொடுக்குமாறு வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு தேசிய நெடுஞ்சாலைதுறையினர் சம்மதித்ததாகவும், பெங்களுரூவில் உள்ள வனத்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்ததும் அதற்கான பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாக பொறியாளர் ரெஸ்க்பெலிக்ஸ் தெரிவித்தார்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X