தமிழ்நாடு

தொடர்கிறது! இ பாஸ்' பெற்று கேரளா செல்பவர்களும் குமுளி வழியாக மட்டுமே செல்ல அனுமதி

Added : நவ 21, 2020
Share
Advertisement
மாவட்டத்தில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 'இ பாஸ்' பெற்று கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு விவசாயப் பணிகளுக்காக ஜீப் மற்றும் கார்களில் குமுளி வழியாக செல்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இ பாஸ்' பெற்று கேரளா

மாவட்டத்தில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 'இ பாஸ்' பெற்று கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு விவசாயப் பணிகளுக்காக ஜீப் மற்றும் கார்களில் குமுளி வழியாக செல்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இ பாஸ்' பெற்று கேரளா செல்பவர்களும் குமுளி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளா குமுளி போலீஸ் சோதனைச் சாவடியில் சோதனை செய்து அனுப்புவதிலும், அதன்பின் சுகாதாரத்துறையினர் தொழிலாளர்கள் அனுமதிக்கான டோக்கன் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் வரும் வாகனங்கள் குமுளி மலைப்பாதையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது.

வண்டன்மேடு, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதிக்கு தொழிலாளர்கள் குமுளி வழியாக சுற்றிச் செல்லும் போது கூடுதல் நேரம் ஆகி விடுகிறது. இதனால் கம்ப மெட்டு வழியாகவும் தொழிலாளர்களை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X