கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கொலையில் வாலிபர் விடுதலை 'நோட்டீஸ்' அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், விடுதலையான வாலிபருக்கு வாரன்ட் பிறப்பிக்கக் கோரிய வழக்கில், அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு தொழிலாளியின், 13 வயது மகள், 2019 ஏப்., 16ல் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, வேடசந்துார் அருகே, குரும்பபட்டயைச் சேர்ந்த கிருபானந்தம், 19, மீது

மதுரை:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், விடுதலையான வாலிபருக்கு வாரன்ட் பிறப்பிக்கக் கோரிய வழக்கில், அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு தொழிலாளியின், 13 வயது மகள், 2019 ஏப்., 16ல் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, வேடசந்துார் அருகே, குரும்பபட்டயைச் சேர்ந்த கிருபானந்தம், 19, மீது வடமதுரை போலீசார் வழக்குப் பதிந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம், செப்., 29ல் விடுதலை செய்தது.

இவ்விவகாரத்தில், அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாகவும், மாநில அளவில் போராட்டம் நடந்தது.இதையடுத்து, அக்டோபரில், உயர் நீதிமன்ற கிளையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதில், 'இறந்த சிறுமியின் ரத்தம், கிருபானந்தத்தின் ஆடையில் படிந்திருந்தது. இது, டி.என்.ஏ., பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து, கிருபானந்தம் வெளியேறியதை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.'இச்சாட்சிகளை, கீழமை நீதிமன்றம், சரியாக பரிசீலிக்காமல் விடுதலை செய்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விசாரித்த நீதிபதிகள், கிருபானந்தத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், 'கிருபானந்தம் வெளியில் இருந்தால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அது, விசாரணையை பாதிக்கும். அவருக்கு வாரன்ட் பிறப்பித்து, சிறையில் அடைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, மனு செய்யப்பட்டது.கிருபானந்தத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு, டிச., 16க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X