மதுரை : மதுரை மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் நடப்பாண்டு செயல்படுத்தப்படவுள்ளது
.கலெக்டர் அன்பழகன் கூறியுள்ளதாவது: இத்திட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் தலா 5 பேர் வீதம் 65 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். முதற்கட்டமாக 32 பேருக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகள் தேர்வில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினராக இருப்பர்.
கோழி வளர்ப்பில் ஆர்வம், அனுபவமுள்ளவர்களாக இருப்பது அவசியம். ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்க இடம், கொட்டகை வசதி இருக்க வேண்டும். கோழிகுஞ்சுகள் வாங்க, தீவனம் மற்றும் குஞ்சு பொறிப்பான் வாங்க 50 சதவீதம் மானியமாக மொத்தம் ரூ.75 ஆயிரம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரை அணுகலாம் என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE