பாலமேடு : சிறுமலை பகுதிகளில் தொடர்மழை பெய்தும் ஆக்கிரமிப்பால் பாலமேடு சாத்தையாறு அணைக்கு நான்கில் ஒரு பங்குநீர் மட்டுமே வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 29 அடியில்10 அடிக்கு மண் மேவியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைபெய்தும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பிற பகுதிகளுக்கு நீரை திருப்புவதால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த அணை மூலம்11 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் 2018 கஜா புயலுக்கு பின், வடகிழக்கு பருவமழையால் நேற்று முன்தினம் இரவுமுதல் நீர்வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளால் தற்போது பெய்த மழைக்கு நிரம்ப வேண்டிய அணைக்கு தாமதமாக நீர் வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE