கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அறங்காவலர் தேர்வுக்குழு தகுதிவிபரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை:கோவில்களை நிர்வகிக்க, அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, 26 மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், அவர்களின் தகுதிகள் மற்றும் பின்புலம் விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்

மதுரை:கோவில்களை நிர்வகிக்க, அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, 26 மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள், அவர்களின் தகுதிகள் மற்றும் பின்புலம் விபரங்களை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளது. இவர்களை தேர்வு செய்ய, மாவட்டந்தோறும் குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது.

இதில், விதிகள்படி, அறிஞர்கள், நன்கொடையாளர்கள், மத ஈடுபாடு உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அவர்களுக்கு கலாசாரம், பாரம்பரியம், கோவில்களின் வரலாறு பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.ஆனால், அரசியல் செல்வாக்கு, தலையீடு உள்ளவர்களை நியமிக்கின்றனர். தகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

அரசியல் பின்புலம் உள்ளவர்களை, அறங்காவலர்களாக நியமித்தால், கோவில் செயல் அலுவலர்களை மிரட்டுவர். ஒப்பந்தப் பணி வழங்குவதில் அழுத்தம் கொடுப்பர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, கோவில் வளாகத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதுவரை நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தகுதி விபரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அறநிலையத் துறை தரப்பு, '38 மாவட்டங்களில், 26 மாவட்டங்களில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முறையாக அறிவிப்பு செய்து, தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலையீடு இல்லை' என தெரிவித்தது.

நீதிபதிகள் உத்தரவுதேவாரம், திருவாசகத்தில் புலமை பெற்றவர்கள், நன்கொடையாளர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், துாய்மையானவர்கள் மற்றும் கிரிமினல் பின்புலம் இல்லாதவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். போலீஸ் வேலை மற்றும் இதர அரசுப் பணிக்கு, போலீசாரின் தடையில்லாச் சான்று கோரப்படுகிறது. அதை, இந்நியமனங்களில் பின்பற்றினால் தான் கடவுளின் சொத்துகளை பாதுகாக்க முடியும்.

தற்போது, 26 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தகுதிகள், பின்புலம் விபரங்களை நவ., 30ல் தாக்கல் செய்ய, தமிழக தலைமைச் செயலர், சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை செயலர், அறநிலையத் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X