பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய எம்.எல்.ஏ., : 'நோட்டீஸ் வாக்குறுதிகளால்' நொந்துபோன மதுரை மத்திய தொகுதி மக்கள்

Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'எங்க எம்.எல்.ஏ.,வை 'டிவி'யில பார்த்திருக்கோம்… பேட்டி கொடுத்து பேப்பர்ல பார்த்திருக்கோம்… தொகுதி முழுவதும் ஒட்டப்படும் போஸ்டர்கள்ல பார்த்திருக்கோம்… ஏன், தி.மு.க., தொண்டர்கள் அச்சடித்து கொடுத்த பிட் நோட்டீஸ்ல கூட பாத்திருக்கோம் ஆனால் அவரை நேர்ல பார்க்கிறது கஷ்டங்க… கஷ்டங்க' என்பதே மதுரை மத்திய தொகுதி மக்களின் புலம்பலாக உள்ளது.ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு என
 சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய எம்.எல்.ஏ., :  'நோட்டீஸ் வாக்குறுதிகளால்' நொந்துபோன மதுரை மத்திய தொகுதி மக்கள்

'எங்க எம்.எல்.ஏ.,வை 'டிவி'யில பார்த்திருக்கோம்… பேட்டி கொடுத்து பேப்பர்ல பார்த்திருக்கோம்… தொகுதி முழுவதும் ஒட்டப்படும் போஸ்டர்கள்ல பார்த்திருக்கோம்… ஏன், தி.மு.க., தொண்டர்கள் அச்சடித்து கொடுத்த பிட் நோட்டீஸ்ல கூட பாத்திருக்கோம் ஆனால் அவரை நேர்ல பார்க்கிறது கஷ்டங்க… கஷ்டங்க' என்பதே மதுரை மத்திய தொகுதி மக்களின் புலம்பலாக உள்ளது.

ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு என பெயர் சொல்லும் ஒரு பெரிய திட்டம் கூட தி.மு.க., எம்.எல்.ஏ., தியாகராஜன் கொண்டு வரவில்லை என்பதை கடும் குற்றச்சாட்டாக வைக்கின்றனர், தொகுதி மக்கள்.நகரின் 'ஹார்ட் ஆப் தி சிட்டி'யில் இத்தொகுதி அமைந்துள்ளது. எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர், சுப்பிரமணியபுரம், ஆண்டாள்புரம், கரிமேடு, தத்தனேரி, சிம்மக்கல், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே நிலையம் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் என மதுரையின் முக்கிய பகுதிகள் இங்கு அடங்கி உள்ளன.

அமெரிக்காவில் பிசினஸ் பார்த்து கொண்டிருந்த தியாகராஜன், அரசியல் ஆசையால் மதுரை வந்து வேட்பாளராக போட்டியிட்டார்.'தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சிறப்பான நகர கட்டமைப்பு கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளை போல் பிரத்யேக வல்லுனர்களை ஈடுபடுத்தி மதுரையின் உட்கட்டமைப்பை மாற்றுவேன்” என்பது உட்பட நான்கு பக்க 'நோட்டீஸ் வாக்குறுதி'களை அளித்து ஓட்டுக் கேட்டு வெற்றியும் பெற்றார்.

ஆனால் சிறு மழைக்கே தாங்காமல் பல் இளித்து பழிவாங்கும் ரோடு, கலர் கலர் குடங்களுடன் தண்ணீருக்கு அலையும் பெண்கள், மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெருக்கடி, மழை நீர் செல்ல வழியில்லாத 'உதவாக்கரை' வாய்க்கால்கள் தான் தொகுதி முழுவதும் காட்சியளிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202011:17:01 IST Report Abuse
bigu ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நகர் முழுதும் ரோடுகளையும் தெருக்களையும் வெட்டிப்போட்டுவிட்டு MLA வை குறை கூறுவதில் என்ன அர்த்தம் ........
Rate this:
Cancel
21-நவ-202007:11:13 IST Report Abuse
ஆப்பு ஏன் 15 லட்சம் போடலாம்னவங்க செஞ்சாங்களா? 2 கோடி பேர் வேலைத் திட்டத்தில் எத்தனை மதுரைக் காரங்களுக்கு வேலை கிடைத்தது? மதுரையை குட்டி ஜப்பான் ஆக்குவேன்னு ஒரு சோழவந்தான் அறிவுஜீவி இன்னிய வரை என்ன செஞ்சாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X