ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்

Added : நவ 21, 2020 | கருத்துகள் (10)
Advertisement
தஞ்சாவூர் : தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவி, 'நீட்' தேர்வுக்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், இட ஒதுக்கீட்டால் டாக்டராக்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்; மனைவி சித்ரா. கூலித் தொழிலாளிகளான இவர்களது மகள் சஹானா, 18; பேராவூரணி அரசு பெண்கள்
 ஏழை மாணவியின் டாக்டர் கனவு  நனவாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்

தஞ்சாவூர் : தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவி, 'நீட்' தேர்வுக்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், இட ஒதுக்கீட்டால் டாக்டராக்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்; மனைவி சித்ரா. கூலித் தொழிலாளிகளான இவர்களது மகள் சஹானா, 18; பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயிரி கணிதவியல் பாடப் பிரிவில் படித்தார்.

இவர், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 524 மதிப்பெண் பெற்றார். 'கஜா' புயலால் வீடு சேதமடைந்த நிலையிலும், ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இவர், நீட் தேர்வு எழுதி டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இது குறித்து, 2019 ஏப்ரல், 25ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டிற்கு தன் சொந்த செலவில், இரண்டு சோலார் விளக்கு அமைத்துக் கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார். தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், தஞ்சை யில் உள்ள தனியார் நீட் மையத்தில் பயிற்சி பெற, சஹானாவுக்கு தேவையான உதவிகள் செய்தார். தற்போது முடிந்த நீட் தேர்வில், 273 மதிப்பெண் எடுத்து, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து உள்ளார். சஹானா கூறியதாவது:என் டாக்டர் கனவிற்கு பலரும் உயிர் கொடுத்தனர். நடிகர் சிவகார்த்தியேகன் உதவியால், டாக்டர் கனவு நனவானது. என் மருத்துவப் படிப்பு செலவு முழுதையும் ஏற்றுக்கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என முதல்வர் அறிவித்ததாலும், டாக்டர் கனவு முழுமையாக நிறைவேறியது. அதற்காக, முதல்வருக்கும் நன்றி.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ramanathan - Chennai,இந்தியா
22-நவ-202018:43:01 IST Report Abuse
P Ramanathan இந்த முதல்வரை பாராட்டத்தான் வேண்டும் ,நண்ட்ரி சிவா தம்பி, வறுமையிலும் செம்மமை யாக வளர்த்த பெட்ரா வர்களுக்கும் நண்ட்ரி,இனி உன்னிதம் உள்ளது டாக்டர் ஆவது
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
22-நவ-202009:23:21 IST Report Abuse
karutthu கட்டுமரத்தின் சமுதாயத்திலும் நல்லவர்கள் தோன்றியிருக்கிறார்களே... அப்படியா யார் அந்த நல்லவர்கள் .....அவர்களுக்கும் நல்ல எண்ணம் இருக்குமே
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-நவ-202017:11:25 IST Report Abuse
Vijay D Ratnam வாழ்த்துக்கள் கண்ணே சஹானா, நீடுழி வாழ்க. இனி உன் பகுதி மாணவர்களின் ரோல்மாடல் நீ. வறுமையின் பிடியில் இருந்தாலும், மனம் தளராமல் கூலிவேலைசெய்து தன் பெண்ணை இந்தளவுக்கு கொண்டுவந்த கணேசன் சித்ரா தம்பதியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மிகுந்த சந்தோசம். நடிகர் சிவகார்த்திகேயன் மாதிரி நடிகர்கள் பலரும் இது போல சரியான மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து உதவமுன் வரவேண்டும். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் இருக்கும் கிராமம் பூக்கொல்லை கிராமத்தில் இருந்து ஒரு டாக்டர். மகிழ்ச்சி. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவக்கல்வியை 7.5. சதவிகித உள்ஒதுக்கீட்டின் மூலம் ஏழை கிராம மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் அவர்களே நன்றி. "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை". என்றான் வள்ளுவன்.நன்றி முதல்வரே. நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X