அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் பூங்கோதை சென்னையில் 'அட்மிட்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருநெல்வேலி:தி.மு.க., முன்னாள் அமைச்சர் பூங்கோதை, நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் பூங்கோதை, கடையம் ஒன்றியத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவமதிக்கப்பட்டார்.இதனால், துாக்க மாத்திரைகள்

திருநெல்வேலி:தி.மு.க., முன்னாள் அமைச்சர் பூங்கோதை, நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் பூங்கோதை, கடையம் ஒன்றியத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவமதிக்கப்பட்டார்.இதனால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில், 40 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க., செயலர் எ.வ.வேலு நெல்லைக்கு வந்தார். சிகிச்சையில் இருந்த பூங்கோதையை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின், நட்சத்திர ஓட்டலில், நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசினார்.

மாவட்ட செயலர்கள் அப்துல்வகாப், ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.,க்கள் மைதீன்கான், லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ., மாலைராஜா ஆகியோரை தனித்தனியே அழைத்து பேசினார். மேலும், நகர, ஒன்றிய செயலர்களிடமும் ஆலோசித்தார். 'வரும் தேர்தலில், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு தந்து பணியாற்றுவோம்' என ஒவ்வொருவரிடமும் எழுதி கையெழுத்து பெற்றார்.

'இனி உட்கட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தான் நடக்கும். எனவே கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவர் என யோசிக்க வேண்டாம். தற்போது, தேர்தல் பணிக்கு முக்கியத்துவம் தரவேண்டும்' என பேசினார்.இதற்கிடையில், சிகிச்சையில் இருந்த பூங்கோதை, நேற்று ஆம்புலன்ஸ் மூலம், துாத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.பூங்கோதை வெளியிட்ட அறிக்கையில், தான் துாக்க மாத்திரைகள் சாப்பிட்டு, தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை எனவும், திடீர் மயக்கம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X