பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை தரிசனத்திற்கு நவ.23ல் மீண்டும் முன்பதிவு: தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Added : நவ 21, 2020
Share
Advertisement
சபரிமலை:சபரிமைல தரிசனத்திற்கு நவ.,23, 24 தேதிகளில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் தினமும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நவ., ஒன்றாம் தேதி தொடங்கிய சில மணி நேரத்தில் 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது. குறைவான பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டவில்லை. வசூலின்றி தேவசம்போர்டு பெரும் கவலையில்

சபரிமலை:சபரிமைல தரிசனத்திற்கு நவ.,23, 24 தேதிகளில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் தினமும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நவ., ஒன்றாம் தேதி தொடங்கிய சில மணி நேரத்தில் 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது.

குறைவான பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டவில்லை. வசூலின்றி தேவசம்போர்டு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.சபரிமலைக்கு தற்போது வரும் அழைப்புகளில் பெரும்பாலும் தரிசன முன்பதிவு தொடர்பாகவே வருகின்றன. ஆன்லைன் முன்பதிவு மீண்டும் எப்போது தொடங்கும், மாலை போட்டு வந்தால் திருப்பி அனுப்புவீர்களா என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

இந்நிலையில் நவ.,23 அல்லது 24ல் முன்பதிவு மீண்டும் தொடங்க உள்ளதாகவும், தினமும் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை பக்தர்களை அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருமுடி பிரிக்க இடம் பம்பையில் இரவு 7:00 மணிக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது. அவர்கள் இரவு 9:00 மணிக்குள் சன்னிதானம் வர வேண்டும். தாமதமாக வரும் பக்தர் தரிசனம் நடத்தாமல் திரும்ப வேண்டிவரும்.

18-ம் படியேறி தரிசனம் முடித்த பின் மாளிகைப்புறம் செல்லும் பாதையில் இருமுடி கட்டு பிரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .சன்னிதானம், மரக்கூட்டம், சரல்மேடு ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உதவ ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கையுறை, கவச ஆடை போன்றவற்றை கேரள சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.


ரூ.4 கோடியான ரூ.35 கோடி



சபரிமலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 150 முதல் 175 கடைகள் வரை ஏலம் விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 77 கடைகள் மட்டுமே ஏலம் போனது.ஏல தொகை மிகவும் குறைக்கப்பட்டிருந்தும் ஏலம் கேட்க ஆளில்லை. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே ஏலம் போனது. கடந்த ஆண்டு ரூ.35 கோடிக்கு ஏலம் போனது இந்த ஆண்டு ரூ.4 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஏலம் எடுத்த கடைகளிலும் போதிய வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X