பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
கூடலுார்:பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீர் 1511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.கடந்த 4 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 127.90 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4688 கன அடியாகும். நீர் இருப்பு 4244 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் உயர்வால் தமிழகப்பகுதிக்கு

கூடலுார்:பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீர் 1511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 127.90 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4688 கன அடியாகும். நீர் இருப்பு 4244 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் உயர்வால் தமிழகப்பகுதிக்கு 1355 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர் 1511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தேக்கடியில் 4, பெரியாறில் 2 மி.மீ., மழை பதிவானது.

நேற்று பகல் முழுவதும் நீர்பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவியதால் அணைக்கு நீர்வரத்து குறையும் நிலை உள்ளது.மின் உற்பத்தி அதிகரிப்புநீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் முதல் 3 ஜெனரேட்டர்களில் தலா 34 மெகாவாட்டும், நான்காவது ஜெனரேட்டரில் 32 என மொத்தம் 134 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரித்தது. நேற்று முன்தினம் 3 ஜெனரேட்டர்களில் 105 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X