கூடலுார்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் என கட்டி ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை காப்பாற்றவே நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி, புதிய அணை என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தமிழக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். இதில் 104 அடி வரை டெட் ஸ்டோரேஜில் உள்ள 5 டி.எம்.சி., தண்ணீரை தமிழகப்பகுதிக்கு எடுக்க முடியாது. 1979ல் 136 அடியாக குறைத்து நிலைநிறுத்தியபோது 5 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே பயன்பட்டு வந்தது. அந்த நேரத்தில் நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி ஏரியின் கரையோரப்பகுதியில் கேரள வனத்துறையின் அனுமதியோடு தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் என மிகப்பெரிய கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டன.
ஓட்டுக்காக எதிர்ப்பு2014 மே 7 ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் 4 முறை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அப்போது ஆக்கிரமிப்புகள் செய்த இடத்தில் தண்ணீர் சூழ்ந்தன. மேலும் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அனைத்தும் மூழ்கும் நிலை இருந்தது.
இவர்களை காப்பாற்றும் எண்ணத்தில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தற்போதைய அணை பலவீனமாக உள்ளதாகக்கூறி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்காகவே அம்மாநில அரசு புதிய அணை என்ற திட்டத்தையும் கையில் எடுத்து காய் நகர்த்தி வருகிறது.
25 சதவீதம் ஆக்கிரமிப்பு
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மதுரை மண்டல செயலாளர் திருப்பதிவாசகன் கூறியது: கேரளாவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. ஆளும் கட்சிக்கு பல பிரச்னைகள் வந்துள்ளன. இதை திசை திருப்பவே கொல்லம் பிரேமசந்திரன் எம்.பி., வழக்கறிஞர் ரசூல் ராய் போன்றவர்கள் புதிய அணை திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அணை நீர்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE