தமிழ்நாடு

வைகை அணையை தூர் வார வேண்டும்; விவசாயிகள் முறையீடு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை : மழை பெய்வதையொட்டி கடைமடை பகுதிக்கும் கிடைக்கும் வகையில் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும், வைகை அணையை துார் வார வேண்டும் என மதுரையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக

மதுரை : மழை பெய்வதையொட்டி கடைமடை பகுதிக்கும் கிடைக்கும் வகையில் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும், வைகை அணையை துார் வார வேண்டும் என மதுரையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.

கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, பொதுப்பணித்துறை பெரியாறு வைகை நீர்அள ஆதார செயறபொறியாளர் சுகுமாறன், உதவி கோட்ட பொறியாளர்கள் மொக்கமாயன், செல்வம், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் புகாரி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை பங்கேற்றனர்.

ஒன்றியங்கள் வாரியாக விவசாயிகள் பேசியதாவது...

* பால்சாமி, அலங்காநல்லுார்: சாத்தையாறு அணை மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. ஆனால் அணைக்கு தண்ணீர் வராததால் பத்தாண்டுகளாக விவசாயம் இல்லை. தற்போது மழை பெய்கிறது. ஆனாலும் அணைக்கு நீர்வரத்து இல்லை.

* கலெக்டர்: இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து அணைக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மணிகண்டன், செல்லம்பட்டி: உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் வைகை அணை தண்ணீரை திறந்து விட வேண்டும். வைகை அணையை அடுத்தாண்டாவது துார்வார வேண்டும்.

* பொதுப்பணித்துறை அதிகாரிகள்: வைகை அணையில் 67 அடி தண்ணீர் நிரம்பினால் மட்டுமே 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போது மழை பெய்வதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது

* கலெக்டர்: இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுகிறேன்.

* சேடபட்டி விவசாயி : மக்காச்சோளம் எங்கள் பகுதியில் மானாவாரியாக நன்றாக விளைந்துள்ளது. மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய அரசு மையங்களை திறக்க வேண்டும்.

* மெர்சிஜெயராணி, வேளாண் விற்பனை குழு செயலாளர் : ஈரானி திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தை விவசாயிகள் நேரடியாக விற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விலை கிடைக்காத போது விவசாயிகள் தங்கள் விளைத்த மக்காச்சோளத்தை அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கலாம். விலை கிடைக்கும் போது விற்கலாம்.

* பழனிசாமி, மேலுார்: அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனராக இருந்த செந்தில்குமாரி, மதுரை டி.ஆர்.ஓ., ஆக மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு பதிலாக யாரையும் நியமிக்கவில்லை. கரும்புக்கு பாக்கி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. விரைந்து நிர்வாக இயக்குனரை நியமிக்க வேண்டும்.

* கலெக்டர்: இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.

* பழனிசாமி: விவசாயிகள் தங்கள் நிலத்திற்குரிய பட்டா வேறு பெயர்களில் இருப்பதை அவர்கள் பெயர்களுக்கு மாற்றி கொள்ள தாமதமாகிறது. உரங்களில் கலப்படம் உள்ளது.

* கலெக்டர்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

* திருமங்கலம் விவசாயி: திருமங்கலம் விரிவாக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

* பொதுப்பணித்துறை அதிகாரிகள்: விதிகளின்படி தண்ணீர் திறக்கப்படும்.

* வாடிப்பட்டி விவசாயி: கீழக்குயில்குடி கண்மாய்க்கு நான்கு வழிச்சாலையிலிருந்து செல்லும் பாதையை 'கிளீயர்' செய்து தர வேண்டும். கண்மாயை சுற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும்.

* கலெக்டர்: இதுகுறித்து ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

காணொலி காட்சி வசதி மேம்படுத்தப்படுமா

ஊரடங்கால் குறை தீர்க்கும் கூட்டம் காணொலி காட்சிவாயிலாக நடக்கிறது. விவசாயிகள் 13 ஒன்றியங்களில் அமர வைக்கப்பட்டு குறைகளை தெரிவிக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் செல்லம்பட்டி,மேலுாரில் விவசாயிகள் பேசிய போது காணொலி சரியாக வேலை செய்யவில்லை. வாடிபட்டி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் விவசாயிகள் பேசுவது கேட்கவில்லை.

வரும் காலங்களிலாவது இன்டர்நெட் வசதி கிடைக்குமிடங்களில் விவசாயிகளை பேச வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அல்லது மற்ற மாவட்டங்களை போல மதுரை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில்(ஏற்கனவே நடந்தது போல) நடத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X