கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் ஆவணம் டிஜிட்டல் மயம் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுரை:தமிழகத்தில் அனைத்துக் கோவில்களின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வடிவம்மன்பட்டியைச் சேர்ந்த, முருகன் தாக்கல் செய்த மனு:வடிவம்மன்பட்டியில், வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இதன் பரம்பரை அறங்காவலராக இருந்த நயினார் நாயக்கர், கோவிலை முறையாக

மதுரை:தமிழகத்தில் அனைத்துக் கோவில்களின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வடிவம்மன்பட்டியைச் சேர்ந்த, முருகன் தாக்கல் செய்த மனு:வடிவம்மன்பட்டியில், வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இதன் பரம்பரை அறங்காவலராக இருந்த நயினார் நாயக்கர், கோவிலை முறையாக நிர்வகிக்க வில்லை. கோவிலில் உற்சவர் சிலை திருடுபோனது. அது மீட்கப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது.

நயினார் நாயக்கரை, 'சஸ்பெண்ட்' செய்து அறநிலையத்துறை, 2015ல் உத்தரவிட்டது. அவர், தக்காராக நியமிக்கப்பட்ட, தென்காசி இலஞ்சி குமாரர் கோவில் செயல் அலுவலரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை.சட்ட விரோதம்கோவில் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாப்பின்றி உள்ளன.

கோவிலுக்குச் சொந்தமாக, குறிப்பிட்ட சர்வே எண்ணில், கிரானைட் குவாரி மற்றும் கல் உடைக்கும் கிரஷர், அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் சொத்துகளை மீட்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நீதிபதிகள், 'அறநிலையத் துறை கமிஷனர் ஆஜராக வேண்டும்' என்றனர்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது. அறநிலையத் துறை கமிஷனர் பிரபாகர், காணொலியில் ஆஜரானார்.அறநிலையத் தரப்பு வழக்கறிஞர், 'நயினார் நாயக்கரிடம் இருந்து நகைகள், பொறுப்புகள் பெறப்பட்டுள்ளன. சில சொத்துகளை, கோவில் நிர்வாகத்தின் பெயரில் மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


பல புகார்கள்



நயினார் நாயக்கர் தரப்பு வழக்கறிஞர், 'மனுதாரர் மீது பல புகார்கள் உள்ளன' என்றார்.நீதிபதிகள் உத்தரவு:அனைத்துக் கோவில்களின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு அறநிலையத் துறையில், போதிய தகுதியான தொழில் நுட்ப அலுவலர்கள் இல்லை எனில், 'அவுட்சோர்சிங்' முறையில் பணியை மேற்கொள்ளலாம். இவ்வழக்கில் குவாரி விதிமீறலில் நடவடிக்கை குறித்து, அரசுத் தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டிச., 9க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X