சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்திய ஊசி மருந்து பறிமுதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 6 ஆயிரம் வைட்டமின் ஊசிமருந்தை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இரவு ஹோவர்கிராப்ட் கப்பலில் மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சென்றனர். அப்போது தங்கச்சிமடம் தென் கடற்கரையில் கிடந்த மர்ம பார்சலை வீரர்கள் கைப்பற்றினர். இதனுள் 1200 அட்டையில் 6 ஆயிரம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 6 ஆயிரம் வைட்டமின் ஊசிமருந்தை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இரவு ஹோவர்கிராப்ட் கப்பலில் மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சென்றனர். அப்போது தங்கச்சிமடம் தென் கடற்கரையில் கிடந்த மர்ம பார்சலை வீரர்கள் கைப்பற்றினர். இதனுள் 1200 அட்டையில் 6 ஆயிரம் வைட்டமின் பி12 ஊசிமருந்து இருந்தது.இதனை மண்டபம் நிலைய கமாண்டர் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மத்திய, மாநில உளவு போலீசார் விசாரனையில், தங்கச்சிமடம் தென் கடற்கரையில் இருந்து கள்ளபடகில் இலங்கைக்கு ஊசிமருந்தை கடத்தி சென்ற போது, பாதுகாப்பு படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் கீழே போட்டு தப்பி உள்ளனர் என தெரியவந்தது.

இலங்கையில் தட்டுப்பாடு ஊரடங்கினால் இலங்கையில் இறக்குமதிக்கு தடை விதித்ததால் மளிகை, மருந்து பொருளுக்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து கடத்தல்காரர்கள் சமையல் மஞ்சளை டன் கணக்கில் கடத்திய நிலையில், தற்போது மருந்துகளை கடத்தி செல்கின்றனர். இந்த ஊசிமருந்தின் இலங்கை மதிப்பு ரூ.6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X