அரசியல் செய்தி

தமிழ்நாடு

'திருமாவளவன் போன்ற தீயசக்தியை இஸ்லாமியர்கள் புறக்கணிக்கணும்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
சேலம்:''தி.மு.க. - திருமாவளவன் போன்ற தீயசக்தியை தமிழக மக்கள் இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்'' என ஏகத்துவ ஜமாத் நிறு வனர் இப்ராஹிம் கூறினார்.சேலம் கோரிமேட்டில் உள்ள பதாஷா அவுலியா தர்காவில் நேற்று ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் வழிபட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:வி.சி.யின் திருமாவளவன் தொடர்ந்து வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி ஹிந்து

சேலம்:''தி.மு.க. - திருமாவளவன் போன்ற தீயசக்தியை தமிழக மக்கள் இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்'' என ஏகத்துவ ஜமாத் நிறு வனர் இப்ராஹிம் கூறினார்.

சேலம் கோரிமேட்டில் உள்ள பதாஷா அவுலியா தர்காவில் நேற்று ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் வழிபட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:வி.சி.யின் திருமாவளவன் தொடர்ந்து வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறார். ஆனால் தேர்தல் வந்துவிட்டால் கோவிலுக்குள் செல்வது பொட்டு வைப்பது என நடிக்கிறார்.

அவரை போன்றவர்களின் பின்னால் தமிழக முஸ்லீம்கள் சென்றால் ஆபத்தானது. அவரது நாடகத்தை மக்களிடையே வெளிப்படுத்துவோம். தி.மு.க. - திருமாவளவன் போன்ற தீயசக்தியை தமிழக மக்கள் இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும். சமத்துவம் மத நல்லிணக்கத்தை தமிழகத்தில் வலியுறுத்தும் ஒரே கட்சி பா.ஜ.தான். இதை பொது மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


கொலைமிரட்டல்



இதற்கிடையே பா.ஜ., வேல் யாத்திரையில் கலந்து கொள்ள சேலம் நிலவாரப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் வீட்டில் இருந்த இப்ராஹிமை போலீசார் வீட்டு காவலில் வைத் திருந்தனர். அப்போது வாட்ஸ்அப்பில் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X