அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்டர்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பழனிசாமி, தமிழக முதல்வர்: நாகை - அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978ம் ஆண்டு களவுபோன புராதான சிலைகள் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு எனது பாராட்டுகள்.ஸ்டாலின், தி.மு.க., தலைவர் : தமிழக எம்.பி.,க்கள் (வில்சன் -

பழனிசாமி, தமிழக முதல்வர்: நாகை - அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978ம் ஆண்டு களவுபோன புராதான சிலைகள் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் சிலைகளை கண்டெடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு எனது பாராட்டுகள்.

ஸ்டாலின், தி.மு.க., தலைவர் : தமிழக எம்.பி.,க்கள் (வில்சன் - தி.மு.க., சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட்) ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு ஹிந்தியில் பதிலளிக்கும் மத்திய அமைச்சகங்கள்; கண்டனத்திற்குப் பிறகே ஆங்கிலத்தில் பதில். அலுவல் மொழிச் சட்டத்தையே மீறுவதா? பா.ஜ., அரசின் ஹிந்தி ஆதிக்க - மொழிவெறி உணர்வைக் கண்டிக்கிறேன்.

ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்: பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறி விட்டார். விடுதலைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

முருகன், தமிழக பா.ஜ., தலைவர்: வீர வணக்கம். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் அவரை இழந்து வாடும் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன், த.மா.கா., தலைவர்: மீனவர்களுக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி சுமுகமான, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

சீமான், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்: பெரும் அநீதி இழைக்கப்பட்டு செய்யாத குற்றத்திற் காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய், தந்தையரைப் பிரிந்து கொடுஞ்சிறையில் வாடும் அன்புத்தம்பி பேரறிவாளனை சட்டத்தின் அடிப்படையில், இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X