பொது செய்தி

தமிழ்நாடு

தேனி கொரோனா நலம் பெற்றோர் 16,267

Added : நவ 21, 2020
Share
Advertisement
தேனி:தேனி மாவட்டத்தில் நேற்று 24 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை மொத்தம்16,267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டதால் எண்ணிக்கை 16,495 ஆக உயர்ந்தது. பலி 311 ஆக உள்ளது.மதுரை மதுரை மாவட்டத்தில் புதிதாக 52 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,748 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர். மொத்த பாதிப்பு

தேனி:தேனி மாவட்டத்தில் நேற்று 24 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை மொத்தம்16,267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டதால் எண்ணிக்கை 16,495 ஆக உயர்ந்தது. பலி 311 ஆக உள்ளது.

மதுரை மதுரை மாவட்டத்தில் புதிதாக 52 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,748 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர். மொத்த பாதிப்பு 19,457 ஆகும். இதுவரை 436 பேர் இறந்துள்ளனர். தற்போது 273 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 37 பேர் குணமாகினர். மொத்தம்9826 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 10,103 ஆக அதிகரித்தது. இன்னும் 84 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 43 வயது ஆண் உட்பட இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. 42 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6155 பேர் பாதிக்கப்பட்டதில் 5983 பேர் குணமடைந்தனர். 130 பேர் பலியாகினர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தொற்றுடன் சிகிச்சை பெற்ற 20 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 8 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 6192 பேர் பாதிக்கப் பட்டதில், 5987 பேர் குணமடைந்தனர். இது வரை 126 பேர் பலியாகினர். தற்போது 79 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

விருதுநகர்

விருதுநகரில் 29 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை தொற்று பாதித்த 15 ஆயிரத்து 731 பேரில் 15 ஆயிரத்து 449 பேர் குணமடைந்தனர். 57 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X