பொது செய்தி

தமிழ்நாடு

பாக்ஜலசந்தி கடலில் 7 லட்சம் இறால் குஞ்சுகள்: விஞ்ஞானிகள் சாதனை

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடலில் மத்திய மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் 7 லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு சாதனை படைத்தனர். மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடலோரத்தில் மீன் வளத்தை பெருக்கவும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்த்திட மன்னார் வளைகுடா பாக்ஜலசந்தி கடலில் இறால் குஞ்சுகளை விட்டு வருகின்றனர். 2017 முதல் 2020 அக். வரை 1.74 கோடி
 பாக்ஜலசந்தி கடலில் 7 லட்சம் இறால் குஞ்சுகள்: விஞ்ஞானிகள் சாதனை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடலில் மத்திய மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் 7 லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு சாதனை படைத்தனர்.

மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடலோரத்தில் மீன் வளத்தை பெருக்கவும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்த்திட மன்னார் வளைகுடா பாக்ஜலசந்தி கடலில் இறால் குஞ்சுகளை விட்டு வருகின்றனர். 2017 முதல் 2020 அக். வரை 1.74 கோடி இறால் குஞ்சுகளை விட்டுள்ளனர்.

நேற்று பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள பிரப்பன்வலசை வடக்கு கடலில் மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயகுமார் தலைமையில் விஞ்ஞானிகள் படகில் சென்று 7 லட்சம் இறால் குஞ்சுகளை விட்டனர். இதில் மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண்மை உறுப்பினர் முரளீதரன் விஞ்ஞானிகள் சங்கர் ஜான்சன் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X