பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பணிகள் குறித்து ஆலோசனை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில், கோவை வடக்கு கோட்ட அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.கோவை வடக்கு, அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களுக்கான, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில், கோவை வடக்கு கோட்ட அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.கோவை வடக்கு, அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களுக்கான, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஆர்.டி.ஓ., சுரேஷ் தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் என்ற முறையில் கோவை வடக்கு தாசில்தார் மகேஷ்குமார், அன்னுார் தாசில்தார் சந்திரா, மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள் மணிவேல், சரவணன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சி சார்பில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், புதிய வாக்காளர்களை சேர்த்தல், இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்குதல், மாற்றுத் திறனாளிகள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை கண்டறிதல், தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் என, கோவை வடக்கு கோட்ட முழுவதும் இப்பணியில் ஈடுபடும், 1,038 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 94 மேற்பார்வை அலுவலர்கள், 78 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும், 10 வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர், வாக்காளர் பட்டியல் திருத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது.அரசியல் கட்சியினர், வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்திற்கான விவரங்களை வழங்குமாறும், தங்கள் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின், அதை கடிதம் மூலமாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X