பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலம்: ரயில்வே ஆணையர் ஆய்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தின் திறன் குறித்து தெற்கு மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம்கிர்பால் ஆய்வு செய்தார்.நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தை தினமும் ரயில்வே ஊழியர்கள் பராமரித்து வரும் நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பாலம் பலவீனமாகி இரும்பு பிளேட் சேதமடைந்தது. இதனை அகற்றி துாக்கு பாலத்தை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தின் திறன் குறித்து தெற்கு மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம்கிர்பால் ஆய்வு செய்தார்.

நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தை தினமும் ரயில்வே ஊழியர்கள் பராமரித்து வரும் நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பாலம் பலவீனமாகி இரும்பு பிளேட் சேதமடைந்தது. இதனை அகற்றி துாக்கு பாலத்தை புதுப்பித்தனர்.இந்நிலையில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய மிதவை படகுகள் அடுத்தடுத்து தற்போதைய பாலத்தில் மோதியதால், துாண்கள் சேதமடைந்தது.

இதனால் பாலத்தின் துாண்கள், துாக்கு பாலம் பலவீனமாகி உள்ளதா என நேற்று தெற்குமத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம்கிர்பால், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து படகில் வந்து பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை ஆய்வு செய்தார்.பின் டிராலி மூலம் துாக்கு பாலத்தை திறந்து மூட செய்து, அதன் செயல் திறன் குறித்து ரயில்வே பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X