தமிழ்நாடு

என்ன பாவம் பண்ணினோம் அமைச்சரே! உங்க பக்கத்து வார்டுல இருந்தும் தண்ணிக்கு தவிக்கிறோம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை;அமைச்சர் வேலுமணி வீடு, எங்க ஏரியாவுல இருக்குன்னு, வாய்சவடாலுக்கு வேண்டுமானால் சொல்லலாம் போலிருக்கிறது. 94 மற்றும், 97வது வார்டுகளைச் சேர்ந்த மக்கள், தண்ணீருக்காக தவமிருக்கிறார்கள்; 25 நாட்களை கடந்தும் கூட, ஒரு சொட்டு கூட, சப்பை தண்ணீர் கொடுக்காமல், வதைக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 97வது வார்டு, அன்னை இந்திரா நகர் மற்றும் விரிவு - 1, 2,

கோவை;அமைச்சர் வேலுமணி வீடு, எங்க ஏரியாவுல இருக்குன்னு, வாய்சவடாலுக்கு வேண்டுமானால் சொல்லலாம் போலிருக்கிறது.
94 மற்றும், 97வது வார்டுகளைச் சேர்ந்த மக்கள், தண்ணீருக்காக தவமிருக்கிறார்கள்; 25 நாட்களை கடந்தும் கூட, ஒரு சொட்டு கூட, சப்பை தண்ணீர் கொடுக்காமல், வதைக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 97வது வார்டு, அன்னை இந்திரா நகர் மற்றும் விரிவு - 1, 2, அஷ்டலட்சுமி நகர், அசோக் நகர், கஸ்துாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதே போல், 94வது வார்டில், ஜி.கே.ஸ்கொயர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.இப்பகுதியில் வசிப்போருக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், 'போர்வெல்' தண்ணீர், 25 நாட்களுக்கு மேலாகியும் வழங்கவில்லை.'எப்பதாங்க, தண்ணீர் கொடுப்பீங்க' என, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், 'குறிச்சி குளக்கரையில், 'ஸ்மார்ட் சிட்டி' வேலையின்போது, குழாயை உடைச்சிட்டாங்க.
பண்டிகை விடுமுறைக்கு தொழிலாளர்கள் ஊருக்கு போயிட்டாங்க; அதனால, 'லேட்' ஆயிடுச்சு' என, சப்பைக்கட்டு காரணம் கூறுகின்றனர்.அதற்காக, 'குழாய் உடைப்பை சரி செய்ய, 25 நாட்களுக்கு மேலாகுமா? அதுவரை தண்ணீரின்றி, தவிக்க வேண்டுமா, 'ஸ்மார்ட் சிட்டி' வேலைகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும்; அவர்கள் உடைப்பை சரி செய்யும் வரை, காத்திருக்க வேண்டுமா' என, கொந்தளிக்கின்றனர், 97வது வார்டு மக்கள்.அப்பகுதியினர் கூறுகையில், 'சுகுணாபுரத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி வசிக்கிறார். பக்கத்து ஏரியாவில் வசிக்கிறார் என்று சொன்னால், எங்களுக்குதான் இனி கேவலம்.
அவர் வசிக்கும் பகுதியிலேயே, 10 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிநீர் வழங்குகிறார்கள்; 25 நாட்களை கடந்தும், சப்பை தண்ணீர் கொடுக்கவில்லை. இத்தனைக்கும், மாநகராட்சி நிர்வாகம், அவரது துறைக்கு கீழே செயல்படுகிறது. எந்த லட்சணத்தில், தெற்கு மண்டல அதிகாரிகள் பணிபுரிகிறார்கள் என, தெரிந்து கொள்ளலாம்' என பொங்கினர்.மாநகராட்சி இளநிலை பொறியாளர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ''பொங்காளியம்மன் கோவில் அருகே, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை செய்தவர்கள், 'போர்வெல்' குழாயை உடைத்து விட்டனர். அவர்களே சீரமைத்து தருவதாக கூறினர். போர்வெல் தண்ணீர் கொடுத்து, 25 நாட்களுக்கு மேலாகி விட்டது உண்மையே. மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்பது தெரியும்.
இன்று (நேற்று) மாநகராட்சியே வேலையை துவக்கி விட்டது. இன்னும் இரு நாட்களுக்குள் சீரமைத்து, தண்ணீர் வழங்கி விடுவோம்,'' என்றார்.'சுகுணாபுரத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி வசிக்கிறார். பக்கத்து ஏரியாவில் வசிக்கிறார் என்று சொன்னால், எங்களுக்குதான் இனி கேவலம்.
அவர் வசிக்கும் பகுதியிலேயே, 10 நாட்களுக்கு ஒருமுறைதான், குடிநீர் வழங்குகிறார்கள்; 25 நாட்களை கடந்தும், சப்பை தண்ணீர் கொடுக்கவில்லை''எப்பதாங்க, தண்ணீர் கொடுப்பீங்க' என, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், 'குறிச்சி குளக்கரையில், குழாயை உடைச்சிட்டாங்க. பண்டிகை விடுமுறைக்கு தொழிலாளர்கள் ஊருக்கு போயிட்டாங்க; அதனால, 'லேட்' ஆயிடுச்சு' என, சப்பைக்கட்டு காரணம் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X