பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் கட்ட பாலப்பணிக்கு மீண்டும் போக்குவரத்து மாற்றம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை;இரண்டாம் கட்ட பாலப்பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி, உடுமலை, பழநி, கேரளா செல்லும் பஸ்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாநகருக்குள் இருந்து குனியமுத்துார், சுந்தராபுரம் செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி

கோவை;இரண்டாம் கட்ட பாலப்பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி, உடுமலை, பழநி, கேரளா செல்லும் பஸ்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாநகருக்குள் இருந்து குனியமுத்துார், சுந்தராபுரம் செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மாதம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, உக்கடம் - ஆத்துப்பாலம் பாலப்பணிகள் நடந்து வரும் பகுதியில், ரோடு அமைக்கப்பட்டு இரு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இப்பாதையில் பொள்ளாச்சி வழியாக பஸ்கள், டவுன்பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஆத்துப்பாலம் பகுதியில் விரைவில் மேம்பாலப்பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X