பொது செய்தி

தமிழ்நாடு

'கொத்தி கொத்தி' ஜெயிச்சது அந்தக்காலம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சண்டை சேவல்களுக்கு கிராக்கி அதிகரித்து விலை உயர்ந்து வருவதால், கோவை கிராம இளைஞர்கள் சிலர் அதன் வளர்ப்பில், சீக்ரெட் ஆக ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில், கத்திக்கட்டு சேவல் சண்டை மறைமுகமாக நடந்து வருகிறது. அதனால், ஆக்ரோஷமான சண்டை சேவல்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. 2,000 - 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.அதனால், தொண்டாமுத்துார் ஒன்றியம்
 'கொத்தி கொத்தி' ஜெயிச்சது அந்தக்காலம்

சண்டை சேவல்களுக்கு கிராக்கி அதிகரித்து விலை உயர்ந்து வருவதால், கோவை கிராம இளைஞர்கள் சிலர் அதன் வளர்ப்பில், சீக்ரெட் ஆக ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில், கத்திக்கட்டு சேவல் சண்டை மறைமுகமாக நடந்து வருகிறது. அதனால், ஆக்ரோஷமான சண்டை சேவல்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
2,000 - 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.அதனால், தொண்டாமுத்துார் ஒன்றியம் நரசீபுரம், தேவராயபுரம், செம்மேடு, வடிவேலாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், சண்டை சேவல் வளர்ப்பு புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது. மயில், கீரி, வெள்ளை கீரி, செம்பூதி, காகம், கருங்காகம் உள்ளிட்ட ரக சேவல்கள் வளர்க்கப்படுகின்றன.அதில், அதிக ஆக்ரோஷம் கொண்ட கீரி மற்றும் மயில் ரக சேவல் விற்பனை அதிகளவில் உள்ளது. ரூ.12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.விவசாய தோட்டங்கள் மற்றும் வீடுகளில், சண்டை சேவல்களுக்காக பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சேவல் குஞ்சுகளை சண்டை சேவல்களாக மாற்றுவதற்கு, தண்ணீர் தொட்டிகள் அமைத்து, நீச்சல் உள்ளிட்ட பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட சத்தான சிறுதானியங்கள் நாளொன்றுக்கு, 500 - 700 கிராம் வரை உணவாக வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில் சண்டைக்கு தயார்படுத்தப்படும் சேவல்களுக்கு, வெளிப்பகுதிகளில் நல்ல விலை கிடைக்கிறது.அதனால், சண்டை சேவல் வளர்ப்பு அதிகரித்து வருவதாக, சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.தொண்டாமுத்துார் ஒன்றியம் நரசீபுரம், தேவராயபுரம், செம்மேடு, வடிவேலாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், சண்டை சேவல் வளர்ப்பு புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது. மயில், கீரி, வெள்ளை கீரி, செம்பூதி, காகம், கருங்காகம் உள்ளிட்ட ரக சேவல்கள் வளர்க்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X