பொது செய்தி

தமிழ்நாடு

பார்க்கதான் சின்ன சைசு...

Added : நவ 21, 2020
Share
Advertisement
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என, மருத்துவர்கள் கூறியபோது, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு பொருட்களை, மக்கள் தேடி பிடித்து வாங்கி சாப்பிட துவங்கினர்.இந்த உணவு பட்டியலில் முக்கியமாக இடம் பெற்ற ஒரு பொருள், எலுமிச்சம் பழம்! இது கொரோனா தொற்று நோய்க்கு மட்டுமல்ல, பல நோய்களை தீர்க்கும் இயற்கை மருந்தாக, இருப்பதை
 பார்க்கதான் சின்ன சைசு...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என, மருத்துவர்கள் கூறியபோது, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு பொருட்களை, மக்கள் தேடி பிடித்து வாங்கி சாப்பிட துவங்கினர்.
இந்த உணவு பட்டியலில் முக்கியமாக இடம் பெற்ற ஒரு பொருள், எலுமிச்சம் பழம்! இது கொரோனா தொற்று நோய்க்கு மட்டுமல்ல, பல நோய்களை தீர்க்கும் இயற்கை மருந்தாக, இருப்பதை அனுபவித்து பார்த்தவர்கள், இப்போது கொண்டாடித்தீர்க்கின்றனர்.
சிட்ரிக் பழங்கள் என்று சொல்லப்படும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.புற்றுநோய் உண்டாக்கும் செல்களை தடுப்பது, கொழுப்பை குறைப்பது, ரத்தத்தில் சர்க்கரையை சமமாக வைப்பது...
இப்படி உடலில் வித்தை காட்டுகிறது இந்த தக்கனுாண்டு பழம்!கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஆயுர்வேத மருத்துவர் விஜய்பிரியா கூறுகையில், ''எலுமிச்சையில் விட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் மூன்றுக்கும் எலுமிச்சை நல்லது. இந்த கொரோனா காலத்தில் பலர் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட இதுதான் காரணம்.சிலர் தேனுடனும், வேறு சிலர் சுடுநீரிலும் கலந்து சாப்பிடுகின்றனர். இப்போது எலுமிச்சையின் தோலில், கேன்சர் நோயை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக கண்டறிந்து இருப்பதால், வெளிநாட்டினர் எலுமிச்சையை அப்படியே சாப்பிடுகின்றனர்,'' என்கிறார்.
* நோய் எதிர்ப்பு சக்திஎலுமிச்சை சாறுடன் கொஞ்சம் ஆரஞ்சு சாறும், சிறிதளவு மஞ்சள் துாளும் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் கலந்து காலையில் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.* ரத்த அழுத்தம் சீராகும்எலுமிச்சையின் தோலில் கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் பொட்டாசியம் சேர்ந்து இருப்பதால், ரத்தக்குழாய் சுவர்களைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.
* ரத்த அணுக்கள் அதிகரிக்கும்எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம், மூளை நரம்புகளை துாண்டி, சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.* கழிவுகளை வெளியேற்றும்எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுவதால், அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் செரிமானப் பிரச்னை வராது.* கொரோனாவுக்கு எதிர்ப்புஎலுமிச்சை பழத்தில் உள்ள 'சிட்ரிக் அமிலம்' சளி, இருமல், தொண்டை வலி ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. அதனால் கொரோனா போன்ற நோய்களை, என்ன சேதி என கேட்கும்.
* எலும்பை பாதுகாக்கும்எலுமிச்சையில் கால்சியம் அதிகம் இருப்பதால், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. பித்த நீரை சுரக்க வைக்கும் தன்மை உண்டு என்பதால், காமாலை நோய்க்கும் இது மருந்தாகிறது.''எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதற்காக, அதை தினமும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்றில் 'அசிடிட்டி' அதிகரிக்கும். அல்சர் தொல்லை ஏற்படும். வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் ஒரு வேளை சாப்பிடலாம்,''என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் டாக்டர் விஜய்பிரியா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X