பொது செய்தி

தமிழ்நாடு

டேஸ்ட்டில் மல்லுக்கட்டுது...

Added : நவ 21, 2020
Share
Advertisement
அறுசுவை விருந்துக்கும், ராஜ விருந்துக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள, ஸ்ரீ காமாட்சி பட்டுக்கோட்டை மெஸ்க்கு ஒரு 'விசிட்' அடிக்கலாம்!ஒரு விருந்து மட்டுமல்ல, ஆட்டுக்கறி விருந்து, கோழி விருந்து, கடல் விருந்து, ராஜ விருந்து இப்படி நான்கு வகையான விருந்துகளை நன்றாக ருசிக்கலாம்.தலைவாழை இலையில் சின்ன
 டேஸ்ட்டில் மல்லுக்கட்டுது...

அறுசுவை விருந்துக்கும், ராஜ விருந்துக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள, ஸ்ரீ காமாட்சி பட்டுக்கோட்டை மெஸ்க்கு ஒரு 'விசிட்' அடிக்கலாம்!ஒரு விருந்து மட்டுமல்ல, ஆட்டுக்கறி விருந்து, கோழி விருந்து, கடல் விருந்து, ராஜ விருந்து இப்படி நான்கு வகையான விருந்துகளை நன்றாக ருசிக்கலாம்.தலைவாழை இலையில் சின்ன வெங்காயத்தில் துவங்கி, வகை வகையான கூட்டு, பொரியல், சுடச்சுட சாதம், மட்டன், சிக்கன், மீன், செம்மீன், நண்டு, கருவாடு என, 10 வகையான அசைவ குழம்பு வகைகள் வரிசையாக பரிமாறப்படுகின்றன.சிக்கன், மட்டன், மீன் மற்றும் செம்மீன் என, ஏழு வகையான பிரியாணிகளும் உண்டு. இதில் செம்மீன் பிரியாணி செம டேஸ்ட். டேஸ்ட்டில் நண்டு பிரியாணியும் மல்லுக்கட்டுகிறது.செட்டிநாட்டு மசாலா சுவை மணக்கும், கிரில்டு சிக்கன் இங்கு மட்டும்தான் கிடைக்கிறது. பட்டுக் கோட்டை ஸ்பெஷல் முந்திரி சிக்கன், இவர்களின் பெயர் சொல்லும் வெரைட்டிகளில் ஒன்று. மட்டன் நெஞ்செலும்பு சாப்ஸ், மட்டன் ஈரல் மசாலா, நல்லெண்ணெய் நாட்டுக்கோழி சுக்கா, நாட்டுக்கோழி மிளகு வறுவல் என, பல வெரைட்டியான அசைவ ஐட்டங்களை பரிமாறி, சாப்பிட வருபவர்களை திணறடிக்கின்றனர்.என்ன...இன்னொரு வயிறும், கொஞ்சம் கூடுதல் பசியும் இருந்தால் நல்லா இருக்கும்!வாடிக்கையாளர்களுக்கு, திருப்திஇருந்தால்தான் மறுபடியும் நம் ஓட்டலை தேடி வருவார்கள். அதனால் உணவின் சுவை, தரம் மற்றும் உபசரிப்பு இந்த மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம். இதுவே எங்கள் ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வரக்காரணம்.- நெடுமாறன் நிர்வாக இயக்குனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X