பொது செய்தி

தமிழ்நாடு

உருவாகிறது நோய் எதிர்ப்பு சக்தி!

Added : நவ 21, 2020
Share
Advertisement
கொரோனா தொற்று பரவல் இப்போது எப்படி இருக்கிறது?ஆக., முதல் செப்., வரை, தொற்று பரவல், 'பீக்'கில் இருந்தது. அக்.,ல் குறையத் துவங்கியது; தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.குறைய என்ன காரணம்?வீதி வீதியாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தியது முதல் காரணம். தினமும், 100க்கும் குறையாமல் முகாம் நடத்தினோம். 4,000 பேருக்கு சளி பரிசோதனை செய்தோம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோய்
 உருவாகிறது நோய் எதிர்ப்பு சக்தி!

கொரோனா தொற்று பரவல் இப்போது எப்படி இருக்கிறது?

ஆக., முதல் செப்., வரை, தொற்று பரவல், 'பீக்'கில் இருந்தது. அக்.,ல் குறையத் துவங்கியது; தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.குறைய என்ன காரணம்?

வீதி வீதியாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தியது முதல் காரணம். தினமும், 100க்கும் குறையாமல் முகாம் நடத்தினோம். 4,000 பேருக்கு சளி பரிசோதனை செய்தோம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோய் பிறருக்கு பரவாமல் தடுத்தோம்.கொரோனா இரண்டாவது அலை வீசும் என்கிற அச்சம் இருக்கிறதே...?

இரண்டாவது அலை வராது என, அசட்டு தைரியத்தில் இருக்கக் கூடாது. தடுப்பு மருந்து, தடுப்பூசி இன்னும் வராத காரணத்தால், முக கவசம் அணிவது; சமூக இடைவெளி பின்பற்றுவது; நெரிசல் மிகுந்த பகுதிக்குச் செல்வதை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை, தவறாமல் பின்பற்ற வேண்டும்.தொற்று கட்டுக்குள் இருப்பதாக கூறினாலும், உயிரிழப்பு தொடர்கிறதே; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 600ஐ நெருங்கி விட்டதே?

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் மக்கள் தொகை அதிகம். நோய் பாதிப்பும் அதிகம். இதுவரை, 47 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளித்திருக்கிறோம். மற்ற மாவட்டங்களை காட்டிலும், இறப்பு விகிதம் குறைவு. மருத்துவ முகாம்களில், சளி மாதிரி சேகரிப்பதற்கு முன், ஆக்சிஜன் அளவை பரிசோதித்து, 'ரிசல்ட்' வருவதற்கு முன்பாகவே, மருத்துவமனையில் அனுமதித்து, பலரது உயிரை காப்பாற்றி இருக்கிறோம்.கொரோனா பரி சோதனை இன்னமும் செய்யப்படுகிறதா?

முகாம் நடத்துவது, சளி மாதிரி சேகரிப்பது, அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தொடர்கிறது. அறிகுறி இருப்பவர்கள், பயப்படாமல் பரிசோதனைக்கு வர வேண்டும்; நோய் இருந்தால் தனிமைப்படுத்தி, சிகிச்சை பெற வேண்டும்.'டிஸ்சார்ஜ்' ஆகி, செல்வோரை தொடர்ந்து கண்காணிக்கிறீர்களா?

ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறோம்; களப்பணியாளர்கள் மூலம், வீடு வீடாக ஆய்வு செய்கிறோம்.நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா என, 12 இடங்களில், தலா, 30 பேர் வீதம், 360 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டதே; அதன் முடிவு என்னவானது?

அதில், 25-30 சதவீதத்தினருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.'கொரோனா இல்லாத கோவை' எப்போது உருவாகும்?

அது, மக்களின் கைகளில் தான் இருக்கிறது. அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தால், ஒரு மாதத்தில், கொரோனா இல்லாத சமுதாயம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதனால், மாஸ்க் அணிவது மிகவும் முக்கியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X