சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி மாயம் :போலீஸ் விசாரணை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பேரூர்:13 வயது சிறுமி மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவைப்புதுாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின், 13 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யாததால், நேற்று முன்தினம் பெற்றோர் திட்டியுள்ளனர். அதனால் 20 வயதாகும் பவித்ரா என்ற பெண்ணுடன் செல்வதாக, கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளார்.அதே பகுதியை சேர்ந்த

பேரூர்:13 வயது சிறுமி மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவைப்புதுாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின், 13 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யாததால், நேற்று முன்தினம் பெற்றோர் திட்டியுள்ளனர். அதனால் 20 வயதாகும் பவித்ரா என்ற பெண்ணுடன் செல்வதாக, கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளார்.அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின், 14 வயது மகனையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் மூவரும் கிடைக்கவில்லை. சிறுமியின் தாய்,பேரூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், மூவரையும் தேடுகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மூவரும் பஸ்சில் சென்றதும், ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X