சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளிக்கு ரூ.13.5 லட்சம் இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு, 13.45 லட்சம் ரூபாய் இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.வேடப்பட்டி அருகேயுள்ள நம்பிஅழகன்பாளையத்தை சேர்ந்தவர் வீரமலை,37; கட்டட தொழிலாளியான இவர், 2016, மார்ச், 24ல், பைக்கில் கணபதி, சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதியதில், வீரமலைக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இழப்பீடு

கோவை:விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு, 13.45 லட்சம் ரூபாய் இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.வேடப்பட்டி அருகேயுள்ள நம்பிஅழகன்பாளையத்தை சேர்ந்தவர் வீரமலை,37; கட்டட தொழிலாளியான இவர், 2016, மார்ச், 24ல், பைக்கில் கணபதி, சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதியதில், வீரமலைக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இழப்பீடு கோரி வீரமலை, கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், வீரமலைக்கு 10.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, கடந்தாண்டு ஏப்., 11ல் உத்தரவிட்டது.ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், வட்டியுடன் சேர்த்து, 13.45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிபதி முனிராஜா, அரசு போக்குவரத்து கழக பஸ்சை, ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், தடம் எண், '5 சி' டவுன் பஸ், நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X