பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ லட்சுமி நகர் ஜனங்க 'ஹவுஸ் அரெஸ்ட்!' மனு பல கொடுத்தும் மாநகராட்சி மனசு வைக்கலை

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் ஸ்ரீ லட்சுமி நகரில், இரு தினங்களுக்கு முன் இரவு பெய்த கனமழைக்கு, அப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.கோவை மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட, இடையர்பாளையம் ஸ்ரீ லட்சுமிநகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 15 தெருக்கள் உள்ளன. மழை காலங்களில்
 ஸ்ரீ லட்சுமி நகர் ஜனங்க 'ஹவுஸ் அரெஸ்ட்!'  மனு பல கொடுத்தும் மாநகராட்சி மனசு வைக்கலை

கோவை:கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் ஸ்ரீ லட்சுமி நகரில், இரு தினங்களுக்கு முன் இரவு பெய்த கனமழைக்கு, அப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அங்குள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
கோவை மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட, இடையர்பாளையம் ஸ்ரீ லட்சுமிநகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 15 தெருக்கள் உள்ளன. மழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, சாக்கடை கால்வாயும், மழைநீர் வடிகாலும் அமைத்து தருமாறு, தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை, அப்பகுதி மக்கள் சந்தித்து மனு கொடுத்தனர்.இப்பிரச்னை குறித்து பலமுறை அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்களையும், சந்தித்து மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.இச்சூழலில், இரு தினங்களுக்கு முன் இரவு கொட்டித்தீர்த்த மழைக்கு, அப்பகுதி தெருக்கள் குளம் போல் மாறி விட்டன. காலையில் கண் விழித்த ஜனங்களால் வீடுகளில் இருந்து, வெளியேற முடியவில்லை. இரு சக்கர வாகனங்களையும் வெளியே எடுக்க முடியவில்லை.
இது குறித்து, ஸ்ரீ லட்சுமிநகர் குடியிருப்போர் சங்க தலைவர் சந்தோஷ் கூறுகையில், ''ஒவ்வொரு மழை காலத்துலயும், இதே நிலைமைதாங்க. மாநகராட்சியும் சரி, தொகுதி எம்.எல்.ஏ.,வும் சரி, யாரும் கண்டுக்கறதில்லீங்க. உடம்பு சரியில்லாதவங்க, வயசானவங்க, குழந்தைங்கள்லாம் எப்படி இந்த தண்ணிய கடந்து போக முடியும்...நீங்களே சொல்லுங்க. ஸ்மார்ட் சிட்டி அப்படி, இப்படின்னு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்துற மாநகராட்சி, முதல்ல குடியிருப்புவாசிகளோட அடிப்படை தேவைகளை நிறைவேத்தணும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X