பொது செய்தி

தமிழ்நாடு

சூரசம்ஹாரத்தை தொடர்ந்து தெய்வானைக்கு நிச்சயதாம்பூல விழா

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, தெய்வானைக்கு நிச்சயதாம்பூல விழா நேற்று நடந்தது.சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நவ.,15 ல், கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. அன்றாடம் முருகன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு

கோவை:முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, தெய்வானைக்கு நிச்சயதாம்பூல விழா நேற்று நடந்தது.சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நவ.,15 ல், கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. அன்றாடம் முருகன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், ராஜஅலங்காரமும் செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.முன்னதாக அம்பாளிடம் வேல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், கஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களை, கோவிலின் ஒவ்வொரு பிரகாரத்தை கடக்கும் போதும் தலையை கொய்து அழித்தார்.அதன் பின் முருகப்பெருமானுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் பாலித்தார். அதன் பின் இந்திரனின் மகளான, தெய்வானைக்கு நிச்சயதார்த்த வைபவம் நடந்தது. இதில் சீர்வரிசை பொருட்களை சிவாச்சாரியார்கள் சமர்ப்பித்து, மங்கள தாம்பூலத்தை, பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மாற்றிக்கொள்ளும் சடங்கு நடந்தது.காலை, 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விருந்து உபசாரத்திற்கு பின் பக்தர்கள் சஷ்டி விரதத்தை நிறைவு செய்கின்றனர்.கந்தசஷ்டியை ஒட்டி, கோட்டைஈஸ்ரவன், பேட்டைஈஸ்வரன், கோனியம்மன், மருதமலை சுப்ரமணியசுவாமி,பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X