சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு சரக்கு லாரிகள் மோதி டிரைவர் பலி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:சரக்கு லாரிகள் மோதிக் கொண்டதில், டிரைவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 62; டிரைவர். விருதுநகரில் இருந்து இருசக்கர வாகன உதிரிபாகங்களை, லாரியில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். நேற்று காலை 5:00 மணியளவில், லாரி கோவை லட்சுமி மில் சிக்னலில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற போது, அவிநாசி ரோட்டில், அதிவேகமாக வந்த மற்றொரு

கோவை:சரக்கு லாரிகள் மோதிக் கொண்டதில், டிரைவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 62; டிரைவர். விருதுநகரில் இருந்து இருசக்கர வாகன உதிரிபாகங்களை, லாரியில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். நேற்று காலை 5:00 மணியளவில், லாரி கோவை லட்சுமி மில் சிக்னலில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற போது, அவிநாசி ரோட்டில், அதிவேகமாக வந்த மற்றொரு லாரியுடன் மோதியது.மோதிய விபத்தில், கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திகுமார், 29 படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X