பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நகரங்களுக்கு செல்ல அரசு பஸ் இயக்கம்  துவக்கம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இருந்து பிரசித்த பெற்ற கோவில்களுக்கு அரசு பஸ் இயக்கம் நேற்று முதல் துவங்கப்பட்டது.திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர் வசதிக்காக பஸ் இயக்கப்பட்டது.கொரோனா

திருப்பூர்:திருப்பூரில் இருந்து பிரசித்த பெற்ற கோவில்களுக்கு அரசு பஸ் இயக்கம் நேற்று முதல் துவங்கப்பட்டது.திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர் வசதிக்காக பஸ் இயக்கப்பட்டது.கொரோனா ஊரடங்குக்கு பின் அரசு பஸ் இயக்கம் இயல்புக்கு திரும்பியும், பிரபல கோவில் அமைந்துள்ள ஊர்களுக்கு அரசு பஸ் இயக்கப்படாமல் இருந்தது. தீபாவளிக்கு பின், 90 சதவீத பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. அதன்படி, திருப்பூரில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை ஒரு 'டிரிப்' நேற்று முதல் துவங்கியுள்ளது.பக்தர்கள் பஸ் ஸ்டாண்டில் உள்ள நேர காப்பாளாரை அணுகி, கோவில்களுக்கு பஸ் புறப்படும் நேரத்தை அறிந்து கொள்ளலாம். திருப்பூரில் இருந்து திருச்செந்துார், திருவண்ணாமலைக்கு ஏற்கனவே பஸ் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X