பொது செய்தி

தமிழ்நாடு

128 மாணவியருக்கு கல்வி உதவி ரூ.4.82 லட்சம் வழங்கிய கனரா வங்கி

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 128 அரசு பள்ளி மாணவியருக்கு, 4.82 லட்சம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது.கனரா வங்கியின், 115 வது நிறுவனர் தினம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளியில் பயிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.நேற்றைய விழாவிலும்,
 128 மாணவியருக்கு கல்வி உதவி ரூ.4.82 லட்சம் வழங்கிய கனரா வங்கி

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 128 அரசு பள்ளி மாணவியருக்கு, 4.82 லட்சம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது.கனரா வங்கியின், 115 வது நிறுவனர் தினம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளியில் பயிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.நேற்றைய விழாவிலும், மாவட்டத்தை சேர்ந்த, 128 மாணவ, மாணவியருக்கு, 4.82 லட்சம் ரூபாய் மதிப்பில், கல்வி உதவி வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 34 பள்ளிகளை சேர்ந்த, ஐந்து முதல், ஏழாம் வகுப்பு வரை பயிலும், 63 மாணவியருக்கு, தலா, 2,500 ரூபாய்; எட்டு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 68 மாணவியருக்கு, தலா, 5,000 ரூபாய் வீதம், கல்வி உதவி வழங்கப்பட்டது.மொத்தம், 128 மாணவியருக்கு, 4.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தி, சிறப்பாக பேசிய மாணவியருக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாணவியருக்கான கல்வி உதவியை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கோமகன், கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் ஹரிநாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X