திருப்பூர்:திருப்பூர் நகரில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, தினமும், சராசரியாக, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்த நிலையில், தற்போது, குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று கண்டறியப்படுகிறது.இதனால், வித்யா கார்த்திக், வேலாயுதசாமி ஆகிய திருமண மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களில், மொத்தம், 204 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.எனவே, சில தினங்களில், கொரோனா கேர் சென்டர்களை மூட மருத்துவப் பணிகள் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இது குறித்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி 'டீன்' வள்ளி கூறியதாவது:சில மாநிலங்களில், கொரோனா தொற்று குறைந்து, மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், விரைந்து மூட வேண்டாம் என, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.எனவே, இரு வாரங்களுக்கு நோய் தொற்றின் நிலை குறித்து கண்காணிக்கப்படும். பின்னர், அரசு வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE