பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வாக்காளர் வசதிக்காக, இன்றும், நாளையும் மற்றும் டிச., 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.பொதுமக்கள் பார்வைக்காக, வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மூலமாக பட்டியலை சரிபார்க்க வசதியாக, elections.tn.gov.in என்ற இணையதளத்திலும், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சிறப்பு முகாம், காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை நடக்க

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட வாக்காளர் வசதிக்காக, இன்றும், நாளையும் மற்றும் டிச., 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.பொதுமக்கள் பார்வைக்காக, வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மூலமாக பட்டியலை சரிபார்க்க வசதியாக, elections.tn.gov.in என்ற இணையதளத்திலும், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சிறப்பு முகாம், காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை நடக்க உள்ளது. சிறப்பு முகாமில், படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்க படிவம் -7, திருத்தம் செய்ய படிவம் -8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் -8 ஏ ஆகிய படிவங்களை விண்ணப்பிக்கலாம்.வரும், 2021 ஜன., நிலவரப்படி, 18 வயது பூர்த்தியானவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், 'voter helpline' மூலமாகவும், nvsp என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட மக்கள், இன்றும், நாளையும் நடக்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி, பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் திருத்த பணிகளை மேற்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X