பொது செய்தி

தமிழ்நாடு

வெடித்து தள்ளிய மக்கள்: தீபாவளியில் மாசு அதிகரிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் சாதாரண நாட்களைவிட, தீபாவளி நாளில் காற்று மாசு மாற்றும் ஒலி மாசு அதிகரித்துள்ளது.கடந்த 14ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் சார்பில், தீபாவளி காற்று மாசு ஆய்வு, கடந்த 7ல் துவங்கியது. குமரன் வணிக வளாகம், ராயபுரம் ஆகிய இரு இடங்களில், காற்று தர ஆய்வு கருவி வைக்கப்பட்டு, பண்டிகைக்கு முன்,

திருப்பூர்:திருப்பூரில் சாதாரண நாட்களைவிட, தீபாவளி நாளில் காற்று மாசு மாற்றும் ஒலி மாசு அதிகரித்துள்ளது.கடந்த 14ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் சார்பில், தீபாவளி காற்று மாசு ஆய்வு, கடந்த 7ல் துவங்கியது. குமரன் வணிக வளாகம், ராயபுரம் ஆகிய இரு இடங்களில், காற்று தர ஆய்வு கருவி வைக்கப்பட்டு, பண்டிகைக்கு முன், பண்டிகை நாள் காற்று மாசு அளவிடப்பட்டது. பெறப்பட்ட அளவீடுகள் அடிப்படையில், காற்று மாசு சராசரி மதிப்பிடப்பட்டுள்ளது.மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூரில், வழக்கமான நாட்களைவிட, தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்புகள் அதிகமுள்ள ராயபுரம் சுற்றுப்பகுதிகளில், அதிகளவு பட்டாசு ரகங்கள் வெடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.சாதாரண நாட்களை ஒப்பிடுகையில் போது, தீபாவளி நாளில், கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகள் அதிகரித்துள்ளன. ஆனால், இவ்விரண்டும் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை மிஞ்சவில்லை. காற்று மாசு அளவீடு, தொகுக்கப்பட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X