பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அரக்கனை வதம் செய்ய... சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் வேண்டுதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்;கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உட்பட, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன்கோவில்களில், சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.தீபாவளி பண்டிகை முடிந்ததும், மறுநாள் கந்த சஷ்டி விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஊரடங்கு அமலில் இருப்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டமாக சேர தடைவிதிக்கப்பட்டது; பூஜைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.விரதம் மேற்கொண்ட

திருப்பூர்;கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உட்பட, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன்கோவில்களில், சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.தீபாவளி பண்டிகை முடிந்ததும், மறுநாள் கந்த சஷ்டி விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஊரடங்கு அமலில் இருப்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டமாக சேர தடைவிதிக்கப்பட்டது; பூஜைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
விரதம் மேற்கொண்ட பக்தர்கள், முருகப்பெருமானை தினமும் காலை, மாலை தரிசனம் செய்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு, பெண்கள், இளம் பெண்களுடன், இளைஞர்களும் காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.சூரசம்ஹார விழா நேற்று, அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் கொரோனா அரக்கனை வதம் செய்யுமாறு பிரார்த்தனை செய்தனர்.
திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீ சண்முக சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. வெற்றி வேலுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.மூலவர் சன்னதி முன்பாக, மயில் வாகனம் அருகே சூரன் உருவத்தை, 'வெற்றி வேல்... வீரவேல்' கோஷத்துடன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், ஜெயந்தி நாதருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமான்கோவிலில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வெற்றி வேலுக்கு சிறப்பு பாலாபிேஷகம் செய்து, கோவில் பிரகாரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஊர்வலமாக சென்றனர்.பிறகு, கோவில் பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும், நீர்பூசணி காயை வைத்து, சூரசம்ஹாரம் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னரே, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வாலிபாளையம் ஸ்ரீகல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று வழிபட்டனர். மலைக்கோவில் குழந்தைவேலாயுதசாமி கோவிலில், மலைமீது அமைந்துள்ள கோவில் பிரகாரத்தில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி வேலால் சூரனை வதம் செய்யும் நிகழ்வு முடிந்த பிறகே, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.சூரசம்ஹார விழா நிறைவு பெற்றதும், விரதம் இருந்த முருக பக்தர்களுக்கு, வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X