சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலத்தை சீரமைக்க மக்கள் போராட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:சாமுண்டிபுரத்தில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி, 11-வது வார்டு செல்லம்மாள் காலனி - அரிசி கடை வீதியில் ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறுபாலம் பலமாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால், டூவீலரில் செல்வோர் விபத்தை சந்தித்து வந்தனர்.எனவே, சிறுபாலத்தை சீரமைக்க வலியுறுத்தி,

அனுப்பர்பாளையம்:சாமுண்டிபுரத்தில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி, 11-வது வார்டு செல்லம்மாள் காலனி - அரிசி கடை வீதியில் ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறுபாலம் பலமாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால், டூவீலரில் செல்வோர் விபத்தை சந்தித்து வந்தனர்.எனவே, சிறுபாலத்தை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியினர், மாநக ராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை.எனவே, சிறு பாலத்தை சீரமைக்க வலியுறுத்தியும், தேங்கியுள்ள குப்பையை அகற்ற வலியுறுத்தியும், அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இதையறிந்த சென்ற மாநகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன் குப்பை உடனடியாக அகற்றப்படும், சிறு பாலம் இரண்டு நாட்களில் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X