குளமாகும் ரோடு... குப்பை கிடங்காகும் நீர்நிலை! பல்லடம் வட்டாரத்தில் பரவலாக அவல நிலை

Added : நவ 21, 2020
Share
Advertisement
பல்லடத்தில், தேங்கி நிற்கும் மழை நீரால், ரோடுகள் குளங்களாகவும், தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டிய குளம் குட்டைகள் குப்பை கிடங்குகளாகவும் மாறி வருகின்றன.பல்லடம் வட்டாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன. குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், 35க்கும் அதிகமான குளம் குட்டைகள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. கரையை உயர்த்துவதும், நீர் நிலையின்
 குளமாகும் ரோடு...  குப்பை கிடங்காகும் நீர்நிலை! பல்லடம் வட்டாரத்தில் பரவலாக அவல நிலை

பல்லடத்தில், தேங்கி நிற்கும் மழை நீரால், ரோடுகள் குளங்களாகவும், தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டிய குளம் குட்டைகள் குப்பை கிடங்குகளாகவும் மாறி வருகின்றன.பல்லடம் வட்டாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன.
குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ், 35க்கும் அதிகமான குளம் குட்டைகள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. கரையை உயர்த்துவதும், நீர் நிலையின் பரப்பளவை அதிகப்படுத்துவதுமே குடிமராமத்தின் நோக்கம்.பெரும்பாலான இடங்களில் மண் எடுத்து செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு குடிமராமத்து பணிகள் நடந்தன. பல லட்சம் ரூபாய் நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் இதனால் வீணடிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பை மையப்படுத்தி கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வருவது இதுநாள்வரை கேள்விக்குறியாகவே உள்ளது.நீர் வழித்தடங்களை மீட்டெடுக்காததே இதற்கு முக்கிய காரணமாகும். அதிகாரிகளும் இது குறித்து கவலை கொள்ளாததால், 100 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியும், பல்லடம் வட்டாரத்தில் உள்ள குளம் குட்டைகள் வறண்டே காணப்படுகின்றன.
இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஊராட்சிகள் முறையாக பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் அவற்றை கண்காணிப்பதுடன், நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழித்தடங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த காலத்தில், ஒட்டுமொத்த ஊராட்சியின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்த குளம், குட்டைகள், வறண்டுள்ளன.
சில ஊராட்சி நிர்வாகங்களின் மெத்தன போக்கு காரணமாக, நீர்நிலைகள் இன்று குப்பை கிடங்காகவும் மாற்றப்பட்டு வருகின்றன.எனவே, இயற்கை பாழ்படுத்தும் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, நீர்நிலைகளை மீட்டெடுக்க, மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கையை, உடனே எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X