பொது செய்தி

தமிழ்நாடு

புல் முளைத்த பாதை:கவனிப்பு அவசியம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஊத்துக்குளி ரோடு பாலம் மீதுள்ள நடைபாதையில் புல் முளைத்து காணப்படுவதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதி, ஊத்துக்குளி ரோடு செல்லும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ஊத்துக்குளி ரோடு பகுதியில் பாலம் வழியாக பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கி பிரதான கிளை, தலைமை தபால் நிலையம், கூட்ஸ் ெஷட்
 புல் முளைத்த பாதை:கவனிப்பு அவசியம்

திருப்பூர்:ஊத்துக்குளி ரோடு பாலம் மீதுள்ள நடைபாதையில் புல் முளைத்து காணப்படுவதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதி, ஊத்துக்குளி ரோடு செல்லும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ஊத்துக்குளி ரோடு பகுதியில் பாலம் வழியாக பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கி பிரதான கிளை, தலைமை தபால் நிலையம், கூட்ஸ் ெஷட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடந்து செல்வோர், இதனை பயன்படுத்துகின்றனர்.கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்த மழை காரணமாக, நடைபாதையில் தற்போது புல் வளர்ந்து விட்டது. இதனை கவனிக்காவிடில், வேறு செடிகளும் வளர்ந்து விடும். எனவே, உடனே சீரமைத்து பராமரிக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X