பிளாஸ்டிக் அரக்கனை வதம் செய்வது யார்? மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத அவலம்| Dinamalar

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' அரக்கனை வதம் செய்வது யார்? மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத அவலம்

Updated : நவ 21, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
திருப்பூர்;திருப்பூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கழிவுநீருடன் பிளாஸ்டிக் கழிவு கலந்து, தேங்கி நிற்கின்றன.கடந்தாண்டு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. ஒரு சில மாதங்கள் அதிகாரிகளும் தீவிர ஆய்வு நடத்தி, அபராதம் விதித்தனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பிளாஸ்டிக்
 'பிளாஸ்டிக்' அரக்கனை வதம் செய்வது யார்? மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத அவலம்

திருப்பூர்;திருப்பூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கழிவுநீருடன் பிளாஸ்டிக் கழிவு கலந்து, தேங்கி நிற்கின்றன.கடந்தாண்டு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.
ஒரு சில மாதங்கள் அதிகாரிகளும் தீவிர ஆய்வு நடத்தி, அபராதம் விதித்தனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பிளாஸ்டிக் கவர் பயன்பாடு, தாறுமாறாக அதிகரித்து விட்டது.அவ்வகையில், திருப்பூர், காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரில் பிளாஸ்டிக் பொருள் அதிகளவில் உள்ளது. அப்பகுதியில் ரயில்வே தரை மட்டப் பாலம் உள்ளது. காலேஜ் ரோடு, கொங்கணகிரி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர், மழை நீர் ஆகியன, ரயில்வே பாதையை கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேருகிறது.இந்த பாலம் வழியாக, வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். தற்போது பெருமளவு வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
சாதாரண நாட்களை விட, மழை பெய்யும் போது, கழிவுநீர் அதிகளவில் பெருக்கெடுத்து பாலம் முழுதும் பரவி செல்கிறது.பாலத்தின் அருகே ஒரு ஆழமான குழி உள்ளது. இதில் வழக்கமாக கழிவு நீர் தேங்கி நிற்கும். தற்போது மழையும் பெய்த நிலையில் சுற்றுப்பகுதியில் சேகரமான கழிவு நீரும், மழை நீரும் கலந்து இதில் நிரம்பி வழிகிறது.அதில், பொதுமக்கள் வீசியெறிந்த காலி குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில், தெர்மகோல் அட்டை, பிளாஸ்டிக் கவர்கள், பனியன் கம்பெனி கழிவுகள் ஆகியன உள்ளன.இது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள், கால்வாய்களில் சேரும் போது அவற்றில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீரும், கழிவுநீரும் சென்று பாய்கிறது. இது ஒரு புறம் அவதியை ஏற்படுத்துகிறது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:மண்ணை மாசுபடுத்தி, மலடாக மாற்றும் பிளாஸ்ட்டிக் பொருட்களால், விவசாயம் கண்டிப்பாக பாதிக்கும். இதை தவிர்க்க வேண்டும். இது குறித்து, பல்வேறு அரசு துறையினர் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை.குறிப்பாக, அப்புறப்படுத்தாமல் ரோட்டிலும், கழிவு நீர் கால்வாய்களிலும் வீசுவது தொடர்கதையாக உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு வந்தால் மட்டுமே, பிளாஸ்டிக் அரக்கனை வதம் செய்ய முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X