பொது செய்தி

தமிழ்நாடு

'பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை!' கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்;வன்கொடுமை செய்ததாக, பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஊத்துக்குளி ஒன்றியம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, குருவாயூரப்பன் நகரில் வசித்தவர் குமார், 36; குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர், ஊராட்சி தலைவர் மற்றும் பலர் மீது, புகார் அளித்துள்ளார்.மனித
 'பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை!' கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்

திருப்பூர்;வன்கொடுமை செய்ததாக, பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஊத்துக்குளி ஒன்றியம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, குருவாயூரப்பன் நகரில் வசித்தவர் குமார், 36; குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர், ஊராட்சி தலைவர் மற்றும் பலர் மீது, புகார் அளித்துள்ளார்.மனித உரிமைகள் கமிஷன், இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் அறிக்கை கேட்டுள்ளது. ஊராட்சியை சேர்ந்த மக்கள், சம்பந்தப்பட்ட குமார், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.இதற்காக, 500க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் தனியாக செல்லும் போது, குமார் தொந்தரவு செய்துள்ளார். பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து, போலீசில் புகார் செய்ததால், தாங்களே ஊரை விட்டு செல்வதாக கூறி சென்று விட்டனர்.ஆனால், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் வன்கொடுமை செய்ததாக, தவறான புகார் செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, பொய் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X